க - வரிசை 94 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கொட்டைபோடு

யாவும் தெரிந்த தன்மை.

கொண்டவன்

கணவன்.

கொதிப்பு

கோபம்.

கொத்திக் கொண்டு போ

கைபற்றிக் கொள்.

கொந்தளிப்பு

மனத்துள் தோன்றும் குமுறல்.

கொலைப்பசி

அகோரமான பசி.

கொல்லென்று

சிரித்தல் வகை சாற்றுதல்.

கொள்ளையாக

மிகுதியாக.

கோடங்கி

உடுக்கையடித்துக் குறிசொல்பவன்.

கோடானுகோடி

எண்ணிக்கையற்ற.

கோடாலிக்காம்பு

தன் இனத்தையே அழிப்பவன்.

கோட்டா

கேலி: கிண்டல்.

கோட்டி

பைத்தியம்.

கோட்டை கட்டு

கற்பனையில் இரு.

கோட்டை விடு

தவறவிடு.

கோணல் மாணல்

ஒழுங்கற்றுத் தாறுமாறாக உள்ளது.

கோதா

மல்யுத்தம் செய்தல்.

கோயில் பெருச்சாளி

பிறர் சொத்தைச் சிறிது சிறிதாக அபகரிப்பவர்.

கோரப்பிடி

வறுமைத்துன்பம்.

கோரமான

அச்சம் தருகிற.