க - வரிசை 89 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கிட்டத்தட்ட

ஏறக்குறைய
ஓரளவு

கிட்டிப்புள்

சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு.

கிட்டுதல்

அடைதல் : நெருங்குதல்.

கிட்டே

அண்மையில் : பக்கத்தில்.

கிணற்றுத்தவளை

பரந்த அநுபவம் இல்லாதவர்.

கிம்பளம்

இலஞ்சப்பணம்.

கிரகிப்பு

மனத்தில் இருத்திக் கொள்ளும் தன்மை.

கிராக்கிப்படி

அகவிலைப்படி.

கிராதகம்

கொடுமை.

கிராதகி

கொடுமைக்காரி.

கிராப்பு

தலைமுடி அலங்கார ஒப்பனை.

கிராமிய

நாட்டுப்புறம் சார்ந்த.

கிழக்கோட்டான்

வயது மூத்தோரை அவமதிப்பாகக் குறித்தல்.

கிழடு

முதுமையுடையவர்.

கிழடு கட்டை

முதுமை உடையவர்

கிழம்

கிழடு கட்டை

கிழிப்பவன்

திறமையற்றவனின் செயற்பாடு குறித்து வெறுப்புடன் குறித்தல்.

கிளுகிளுப்பு

மனக்கிளர்ச்சியான உணர்வு.

கிள்ளியெறி

நீக்கு.

கிள்ளுக்கீரை

அற்பமான ஒன்று.
மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற
நினைப்பு