க - வரிசை 91 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
குணாதிசயம்

மேலான குணநலன்.

குண்டு கட்டாக

கட்டாயப் படுத்தித்தூக்கிச் செல்லுதல்.

குண்டுச் சட்டி

ஒரே இடத்திற்குள் இருந்து அலைவது.

குண்டைத் தூக்கிப்போடு

அதிர்ச்சி தரும் செய்திணைக் கூறுதல்.

குதிரைக்கொம்பு

அரியது.

குத்துக்கல்

உருப்படியாக நிலைத்திருத்தல்.

குத்து வெட்டு

அடிக்கடி சண்டை நிகழ்வது.

குபீரென்று

திடீரென்று.

குபுகுபு என்று

வேகமாக.

குப்பை கொட்டு

பயனற்ற வேலை செய்.

கும்மிருட்டு

அடர்ந்த இருள்.

குயுக்தி

இடக்கானது
நேர்மையற்ற சிந்தை
குயுத்தி

குய்யோமுறையோ என்று

உரத்த குரலிட்டுத் துன்பத்தைக் கூறுதல்.

குரங்குப்புத்தி

தடுமாறும் மனம் : அலைபாயும் தன்மை.

குரல்கொடு

கருத்துக்கூறு : பதில் சொல்.

குருட்டாம் போக்கு

முன்யோசனையின்றி.

குருட்டுப்பாடம்

பொருள் புரியாது செய்த மனப்பாடம்.

குருவிக்காரன்

குருவி பிடிப்பவன் : ஒரு வர்க்கத்தினர்.

குல்லாப்போடு

ஒருவரை மகிழ்வித்துச் செயலில் வெற்றிகொள்.

குழந்தை குட்டி

மக்கட் செல்வம்.