க - வரிசை 87 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
காரசாரம்

தீவிரமான விவாதம்.

காரியக்காரன்

தன்னுடைய வளமையில் கருத்தாய் இருப்பவன்.

காரியக்காரி

தன்னுடைய செயலில் கருத்தாய் இருந்து நன்மையடைபவள்.

காரியவாதி

சுய நலத்தோடு செயல்படுபவன்.

காலடியில்

மிகச்சமீபத்தில்
ஆதரவில்
ஒருவனது பிடிக்குள்

காலட்சேபம்

பிழைப்பு : வாழ்க்கை நடத்துதல்.

காலம்காலமாக

தொன்று தொட்டு.

காலம் தள்ளு

வசதியற்ற நிலையில் வாழ்க்கை நடத்துதல்.

காலாகாலத்தில்

அது அதற்கு உரிய காலத்தில்.

காலாவதியாதல்

கெடுமுடிவுற்று அழிதல்.

காலி செய்

வெளியேறு.

காலிப்பயல்

அடாவடித்தனம் செய்பவன், பிறரைத் துன்புறுத்தி வதைப்பவன்.

காலூன்றுதல்

நிலைபெறுதல்: இடம் பெறுதல்.

காலைக்கடன்

மலசலம் கழித்தல்
நீராடல் முதலான செயல்கள்

காலைப்பிடித்தல்

கெஞ்சுதல் : பணிதல்.

காலைவாருதல்

ஏமாற்றுதல் : துரோகம் செய்தல்.

கால் கட்டு

ஆணுக்குத் திருமணம் செய்து உண்டாக்கும் கட்டுப்பாடு.

கால்கடுதாசி

உடனடியான ராஜினாமாக் கடிதம்.

கால்கழுவு

நீரால் மலசலம் முதலியவற்றைப் போக்கித் தூய்மை செய்தல்.

கால் நடையாக

நடந்து செல்லும் தன்மை.