க - வரிசை 86 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
காக்கி

ஒருவகைப் பழுப்பு நிற ஆடை.

காசியாத்திரை

திருமணத்தில் தாலி கட்டுமுன் செய்யப்படும் சடங்குமுறை.

காடா

முரட்டுத் துணி.

காடா விளக்கு

தடித்த திரியிட்ட விளக்கு.

காடி பானை

இழிந்த இடம்.

காட்டான்

முரட்டுத் தனமானவன்.

காட்டிக்கொடு

ஒருவனைத் தண்டிக்கும் வகையில் வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்.

காட்டிக் கொள்

தன்னை நல்லவன் போன்று பாவனை செய்.

காட்டு தர்பார்

வரைமுறையின்றித் தன்னிச்சையாக நடத்தல்.

காட்டுத்தனம்

அநாகரிகம்.

காட்டுமிராண்டி

காட்டில் வசிப்பவன் : அநாகரிகமானவன்.

காதில் போட்டுவை

கவனத்தில் வைத்துக்கொள்.

காதில் வாங்கு

கவனமாகக் கேட்டுக்கொள்.

காது குத்து

காது மடலில் சிறுவர்களுக்குத் துளையிடுதல் : ஒருவர்க்குத் தெரியாது என்று எண்ணி மாறான செய்தியுரைத்தல்.

காதுகொடுத்துக் கேள்

கவனமாகக் கேள்.

காதைக்கடி

செய்தியை இரகசியமாகச் சொல்லு.

காப்பியடி

ஒன்றைப் பார்த்து அதேபோன்று செய்.

காமாசோமா

திருத்தமாக அமையாத : ஒழுங்கின்றி.

காரியமாகுதல்

நிரந்தரமாக அமைதல்.

காய்விடுதல்

நட்பு முறிதல்.