க - வரிசை 93 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கேடுகெட்ட

சிறப்பில்லாத.

கேட்பாரற்று

கவனிப்பதற்கு ஆள் இன்றி.

கேலிக்கூத்து

பிறர் நகைக்குமாறு சிறுமையுடையது.

கேள்விக்குறி

ஐயப்பாடு.

கைகண்ட

சிறந்த : பலன் தரத்தக்க.

கைகழுவு

ஒதுங்கிக் கொள் : கைவிடு.

கைகொடு

உதவி செய்.

கைக்குழந்தை

சிறு குழந்தை.

கைக்குள் போடு

ஒருவரைத் தன்வயமாக்கிக் கொள்.

கைதூக்கிவிடு

பிறரை உயர்த்தி விடு.

கைபிசகாக

தவறுதலாக.

கையாலாகாத்தனம்

செயல்பட இயலாமை.

கையும் களவுமாக

திருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியுமாறு.

கையைக் கடிப்பது

செலவு அதிகமாகி இழப்பு உண்டாவது.

கையைப் பிசைதல்

திகைத்த படி, செயல் எவ்வாறு செய்வது என்று கலங்குதல்.

கைவைத்தியம்

மருத்துவர் உதவியின்றி வீட்டிலேயே செய்து கொள்ளும் மருத்துவம்.

கொசுறு

கடையில் பொருள் வாங்கியபின் இனாமாகக் கொள்ளும் சிறு பொருள்.

கொஞ்ச நஞ்சம்

குறைந்த அளவு.

கொடுப்பனை

நற்பேறு.

கொட்டு கொட்டு என்று

அதிக மழை பெய்தலின் குறி : அயராமல் கண்விழித்தலின் செயல்.