க - வரிசை 88 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கால் மாடு

ஒருவன் படுத்த நிலையில் அவனது கால் உள்ள பக்கம்.

கால் முளைத்தல்

நடந்து செல்லும் துணிவு.

கால்வாங்குதல்

உயிர் மெய் எழுத்துக்களின் பக்கத்தில் "ா" குறியிட்டு நெடிலாக்குதல் :கல் என்பதில் "க" எழுத்தையடுத்து "ா" குறியிட்டுக் "கால்" எனவாக்குதல்.

கால்வழி

சந்ததி.

காவடியெடுத்தல்

உயர் நிலையில் உள்ளவரைப் பலமுறை நாடி வேண்டும் தன்மை.

காறித்துப்பு

வெறுப்புக்காட்டு.

காறியுமிழ்

காறித்துப்பு

காற்றுக் கறுப்பு

பேய், பிசாசு.

காற்றுவாக்கில்

பிறர் சொல்லித் தெரிவது : செவிவழிச் செய்தியாக.

காஜா

உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்பட்ட சிறு துவாரம்.

கிசுகிசு

காதில் மெதுவாகச் சொல்லுதல்
இரகசியம் பேசுதல்

கிசுகிசுப்பு

ஒருவரின் தனிப்பட்ட குணக்கேடுகளைப் பிறர் கேட்காதபடி மறைவாகச் சொல்லுதல்.

கிச்சுக்கிச்சுக் காட்டுதல்

ஒருவர் அக்குள் விலாப்புறம் முதலிய இடங்களை வருடிக் கூச்சம், சிரிப்பு உண்டாக்குதல்.

கிஞ்சித்துவம்

சிறிதளவும்.

கிடப்பில் போடுதல்

காலம் தாழ்த்துதல் : செயல்படாதிருக்கச் செய்தல்.

கிடுக்கிப் பிடி

விடுபடாதபடி.

கிடுகிடு என்று

மிகவும் துரிதமாக.

கிடையவேகிடையாது

உறுதியாக மறுத்தல்.

கிடைமட்டம்

தரைமட்டத்திற்கு இணையானது.

கிட்ட

அருகில்
பக்கத்தில்
அருகே