ச - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சமாளி

ஈடுகொடு
துணிந்து செயல்படு.

சமத்காரம்

சாதுரியம்.

சபலம்

சிறுமையுடைய ஆசை.

சந்தேகம்

அய்யம்

சந்தா

உறுப்பினர் பதிவுக்குச் செலுத்தும் தொகை.

சதா

எப்போதும்.

சந்தடி

நடமாட்டம் : இரைச்சல்.

சடுகுடு

கபடி விளையாட்டு.

சஞ்சிகை

வார, மாத இதழ்.

சஞ்சாரம்

நடமாட்டம்

சச்சரவு

சண்டை
தகராறு
வாதம்
கலகம்

சங்கேதம்

ஒரு சிலருக்கு மட்டும் புரியுமாறு கூறும் இரகசியமான குறிப்புச் சொல்.

சங்கிரகம்

சுருக்கமாக எழுதப்பட்டது.

சங்கடம்

தயக்க நிலை
கூச்சம் இக்கட்டு

சங்கதி

சம்பவம்
செயல்தன்மை

சக்களத்தி

முதல் மனைவி இருக்கும் போது கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.

சகிதம்

துணை
உடன்

சகாயம்

உதவி.

சகவாசம்

பழக்கம், நட்பு

சகலபாடி

மனைவியின் சகோதரி கணவன்.