ச - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சென்னி

சோழன்
சோழமன்னன்
தலை

சேகன்

வேலையில் ஆற்றலுடையவன்

சேணியன்

இந்திரன், வித்தியாதரன்

சேயான்

சிவன், முருகன்

சொக்கன்

சிவன், அழகன்

சோமன்

ஒரு வள்ளல்

சௌந்தரேசன்

சொக்கலிங்க மூர்த்தி

சௌரி

திருமால், துர்க்கை

செல்வாக்கு

மதிப்பு
பெருமை

சேட்டை

குறும்பு.

செல்லம்

குழந்தைகளிடம் காட்டும் அன்பு மிகுதி.

சூனியம்

வெறுமை : பில்லி சூனியம் : ஞான சூனியம் : அறிவற்றவன்.

சுளுக்கு

தசை நார் பிறழ்தல்.

சுரணை

புலனுணர்வு.

சும்மா

கருத்து ஏதும் இன்மை.

சுதாரி

சாமர்த்தியமாச் சமாளி.

சீமை

மேலை நாடு : அயல் நாடு.

சீனி

சருக்கரை.

சீக்கு

நோய்.

சீக்கிரம்

சுருக்கா
விரைவில்.