ச - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சுளையாக

கணிசமாக

சுறுசுறு என்று

விரைவாக, பரபரப்பாக

சுற்றிப்போடு

மிளகாய், மண், உப்பு முதலியவற்றைக் கொண்டு திருஷ்டிக்கழி.

சூடுசுரணை

எதிர்த்துச் செயல்படவேண்டும் என்கிற உணர்வு.

சூடு பிடிப்பது

தீவிரமாகச் செயற்படுதல்.

சூட்டிகை

புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
துருதுருப்பு, சுறுசுறுப்பு, திறமை, சாமர்த்தியம்

சூட்டோடு சூடாக

ஒரு செயலை நடத்திய நிலையில் தொடர்ந்து மேவுதல்
சூடுமேற் சூடு உண்டாகும்படி
உடன் தொடர்ச்சியாக

சூத்திரதாரி

பின்னால் இருந்து இயக்குபவன்

சூரப்புலி

துணிச்சல் உள்ளவர்

சிஷ்ய கோடி

மாணவர் குழாம்.

சுவிசேஷம்

நற்செய்தி

சின்ன வீடு

மனைவி இருக்கும் போது வேறு ஒருத்தியோடு தனியாக நடத்தும் குடும்பம்.

சாம்பல் கதிர்குருவி

ashy prinia

சந்தவானடக்கி

வாதமடக்கி.

சகோதரி

உடன்பிறந்தாள்

சக்கரம்

உருளை
சில்லு
சுழல் வட்டு

சக்கரவர்த்தி

பேரரசன்

சகலமும்

எல்லாமும்

சகா

தோழர்

சகிப்பு

பொறை