ஆ - வரிசை 55 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆஸ்தானம்

அரசவை

ஆஜானுபாகு

அருகி வரும் வழக்கு. நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய

ஆச்சாரி

தச்சர், பொற்கொல்லர், கருமார், சிற்பி, கன்னார் போன்ற தொழில் செய்பவர்கள்

ஆதலின்

எனவே
அதனால்

ஆசாரவாசல்

ஒரு கோயிலின் அல்லது அரண்மனையின் வெளிமண்டபம்

ஆசானுபாகு

முழங்கால் வரை நீண்ட கையுடையவன்

ஆசியா

பூமியின் கண்டங்களுள் ஒன்று

ஆசிரியம்

தமிழ்யாப்பிலக்கணத்தில் கூறியுள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று (அகவல்பா)

ஆசிரியவசனம்

மேற்கோளாக எடுத்துக் காட்டக்கூடிய பிற ஆசிரியரின் வாக்கு

ஆசிரியன்

உபாத்தியானன்
மதகுரு
நூலாசிரியன்

ஆசினி

ஈரப் பலாமரம்
வானம்

ஆசீவகன்

சமணத்துறவி

ஆசு

குற்றம்
அற்பம்
நுட்பம்
பற்றுக்கோடு
ஆதாரம்
உலோகப் பகுதிகளை இணைக்க உதவும் பற்றாக
விரைவு
விரைவில் பாடும் கவி (ஆசுகவி)

ஆஞ்ஞாபி

கட்டளையிடு
ஆஞ்ஞாபித்தல்

ஆஞ்ஞை

கட்டளை உத்தரவு
இரண்டு புருவங்களுக்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் ஒரு சக்கரம்

ஆட்செய்

தொண்டு செய்
ஆட்செய்தல்

ஆட்சேபி

தடை செய்
மறுத்துக் கூறு
ஆட்சேபித்தல்
ஆட்சேபம்

ஆட்டுரல்

அரைக்க உதவும் கல் உரல்

ஆட்டுரோசனை

ஆடுகளின் இரைப்பையில் உண்டாகும் கல் போன்ற ஒரு பொருள்

ஆட்பிரமாணம்

(சராசரி) ஆளின் உயரம்