ஆ - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆச்சிரமத்தான்

ஆச்சிரமத்தையுடைவன்.

ஆச்சிலை

கோமேதகம்.

ஆச்சுவரி

அரசு.

ஆச்சோதனம்

வேட்டை.

ஆஞ்ஞாபித்தல்

கட்டளையிடல்.

ஆடற்கூத்தியர்

அகக்கூத்தாடுவோர்.

ஆடிக்கரு

கர்ப்போடகமேகம்.

ஆடிய

அளைந்த.

ஆடுதல்

ஆடல்

ஆடுதல்

மிக மெதுவாக செயற்படல், ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்காமல் (குறிப்பாக இளம் பெண்கள்) செயற்படுகின்றார்கள் என்ற குறிப்பு

ஆயுதுறை

ஓரூர்.

ஆடவான்

ஆடப்பட்டவன் நடேசன்.

ஆடூஉவறிசொல்

ஆண்பான் மொழி

ஆட்காட்டி

ஆள்காட்டுகின்றவன்
சுட்டுவிரல்
சாலையில் ஒரு வழிகாட்டு பலகை

ஆள்காட்டுகின்றவள்

ஒருபுள், சுட்டுவிரல்.

ஆட்சபணம்

உபவாசம்.

ஆட்சபாடிகன்

நியாயாதிபதி.

ஆட்சபாதன்

ஒரு தருக்கசாத்திரி.

ஆட்சாரம்

குற்றச்சாட்டு.

ஆட்சேபகம்

ஆற்றச்சாட்டு,நோய், வலி