ஆ - வரிசை 31 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆசந்தன்

விட்டுணு.

ஆசமனகம்

துப்பற்காளாஞ்சி.

ஆசமிப்பு

குடிப்பு, உட்கொள்ளுவது.

ஆசரிப்புக்கூடாரம்

வழிபாட்டுப்படாம், வீடு.

ஆசவத்திரு

பனைமார்.

ஆவசம்

கள், விரைவு.

ஆசனவாயில்

மலவாயில்.

ஆசனாத்தம்

நிலைக்கண்ணாடி.

ஆசன்னப்பிரசவம்

ஒருவகைப் பிரசவநோய்.

ஆசாதிதம்

பெறுபேறு.

ஆசாரச்சாவடி

ஆசாரவாயில், பொதுச் சாவடி.

ஆசாரபோசன்

பெருந்தேகி.

ஆசாரப்பிழை

அசுத்தம்,ஒழுங்கின்மை.

ஆசாரன்

ஒழுக்கமுடையவன்.

ஆசாரியபுருஷன்

ஆசாரியன்.

ஆசிகன்

வாடகாரன்.

ஆசிடைவெண்பா

ஆசிடையிட்ட வெண்பா.

ஆசிதசுதன்

சகரசக்கரவர்த்தி.

ஆசிப்பு

ஆசை.

ஆசியபத்திரம்

தாமரை.