ஆ - வரிசை 26 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆகாத

கெட்ட. ஆகாத பிள்ளை

ஆசர்

See ஆஜர்.

ஆஜர்

நேர்வந்திருத்தலைக் குறிக்குஞ் சொல்.

ஆஜீர்

See ஆஜர்

ஆகைச்சுட்டி

ஆகையால் (ஈடு, 7, 10, 8.)

ஆயிட்டு

ஆகையால். அத்துவித மென்றசொல்லே அந்நியநாத்தியை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.)
ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்க தென்கிறாள். (ஈடு. 5, 3).

ஆதல்

ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல். தகடுசெய்தே (கூர்மபு.தான.65).
ஆகுதல்
கூத்து
தோற்றம்
நுண்மை
ஒரு சாத்திர நூல்
ஆவது (எ.கா - தங்கத்தாலாதல், வெள்ளியாலாதல் அணிகள் செய்யலாம்)

ஆயிடை

அவ்விடம். (சீவக. 357.)
அக்காலத்து. (சீவக. 219.)

ஆஆ

அதிசயவிரக்கச்சொல்.

ஆகணதாரம்

கைசிகநிஷாதம்.

ஆகந்துகமசூரிகை

ஆகந்தும் சூரிகைரோகம்.

ஆகந்துகம்

இடையில்வந்தது.

ஆகமபதி

கடவுள்.

ஆகமர்ந்தோன்

விநாயகன்.

ஆகமனகாலம்

சங்கிராந்தி, பிரசவகாலம்.

ஆகமனித்தல்

வருதல்.

ஆகமன்

சிவன்.

ஆகமிலி

மன்மதன்.

ஆகரணம்

ஏவலன்.

ஆகருணணம்

கேட்குதல்.