ச - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சோறு

நன்கு சமைக்கப்பட்ட அரிசி

சக்களமை

சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658)
கடு்ம்பகை

சந்தைக்காரன்

சந்தையில் சரக்கு விற்பவன்

சாயர்சௌகி

சுங்கச்சாவடி

சுருக்கு

கயிறால் போடப்படும் சுருக்கு

சுவை

நாவால் உணரும் சுவை[கைப்பு,இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு]
மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை[நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகை]
[இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம்]

சப்பாத்தி

ரொட்டிவகை

சூப்பான்

குழந்தை அழாமலிருக்க வாயில் வைத்துக்கொள்ளும் சூப்பான்

சேனை

அநீகம் (அ) அநிகம்

சிந்துரம்

சிவப்பு

சிந்தூரம்

சிவப்பு

செந்தூரம்

சிவப்பு

சீந்து

விரும்பு

சிந்து

திரவத்தன்மையுடைய ஒரு பொருளை நிலத்தில் சிந்துதல்(கொட்டுதல்)

செங்கல்

செங்கல் வடிவுள்ள பாளம்
குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டு
செங்கல் வடிவுடைய அப்பப்பாளம்
அப்பக்கட்டி
செங்கல் அடுக்கிட்டு
செங்கல் பாவு
செங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு

சூளைக்கல்

செங்கல்

சா

மரணம்
பேய்
சாதல்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

வத்தாளக்கிழங்கு

சலவைக்கல்

ஒரு வகை வருணக்கல்
தாதுப்பொருள்வகை. (M. M.)
சூரியகாந்தக்கல். (w.)

சோதனைநாழி

திட்டமான முகத்தலளவைக்கருவி