எ - வரிசை 7 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எடுகூலி

சுமைகூலி.

எடுத்தடிமடக்கு

திடுகூறு, துணிவு.

எடுத்தமொழியினெய்தவைத்தல்

ஒருயுத்தி.

எடுத்தலளவு

நிறைவு.

எடுத்தவோசை

குமுறலானவோசை.

எடுத்தன்

பொதிமாடு.

எடுத்தாட்சி

வழக்கம்.

எடுத்தார்கைப்பிள்ளை

எவர்சொல்வதையுங்கேட்டு நடப்பவன்.

எடுத்துக்கட்டு

கட்டுக்கதைபொய்.

எடுத்துக்காட்டல்

ஒருவகையுத்தி.

எடுத்துக்காட்டு

பொது விதிக்கு அல்லது கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை

எடுத்துக்கூட்டுதல்

பிசகினதை ஒருபடிசரிப்படுத்தல்.

எடுத்துக்கைநீட்டுதல்

கைத்தொண்டுசெய்தல்.

எடுத்துப்போடல்

தள்ளிப்போடல்.

எடுபட்டவன்

நிலையற்றவன்.

எடுப்பானவன்

மேட்டிமைக்காரன்.

எட்சத்து

எண்ணெய்.

எட்ட

தூரமாக.

எட்டம்பற்றுதல்

கிடைத்தல்.

எட்டல்

எட்டுதல்.