எ - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எண்சட்டம்

மணிச்சட்டம்

எக்கியம்

யாகம்.

எங்கண்

எவ்விடம்

எங்கு

எவ்விடம்

எங்கை

என் தங்கை.

எசமான்

எசமானன்

எசம்

நரம்பு.

எசலாட்டம்

இகலாட்டம்.

எஞ்சணி

எஞ்சிநிற்குஞ்சொல்.

எஞ்ஞான்றும்

எப்போழ்தும்.

எடுத்துக்காரர்

பொதிமாட்டுக்காரர்.

எட்டர்

மங்கலப்பாடகர்.

எண்கு

கரடி.

எண்ணெய்

தைலம்.

எண்ணெய்க்காப்பு

எண்ணெயபிஷேகம்.

எதாஸ்து

அப்படியாகட்டும்.

எதிர்

முன்னுள்ளது.
கைம்மாறு. சூலையினுக் கெதிர்செய்குறை யென்கொல் (பெரியபு. திருநாவுக். 73)
வருங்காலம். எதிரதுதழீஇய வெச்சவும்மை.
இலக்கு. மற்றெதிர் பெறாமையின் வெளிபோகி (இரகு. திக்குவி. 169). -adv. முன். என்வில்வலிகண்டு போவென் றெதிர்வந்தான் (திவ். பெரியாழ். 3, 9, 2).
உவமைச்சொல்.

எதிர்ப்பை

கைம்மாறு.

எது

யாது.

எத்தனை

எவ்வளவு. எத்தனைகாலமும் (திவ். பெரியாழ். 5, 3, 8).
பல. எத்தனைபகலும் பழுதுபோயொழிந்தன. (திவ். பெரியதி. 1, 1, 2).