எ - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எத்தேசகாலமும்

எப்போழ்தும்.

எமநாகம்

அசமதாகம், ஊமத்தை.

எமநாமம்

ஊமத்தை.

எம்பர்

எவ்விடம்.

எம்புகம்

நிலக்கடம்பு.

எம்மட்டு

எவ்வளவு.

எம்மாத்திரம்

எவ்வளவு.

எய்யாமை

அறியாமை.

எரிகாசு

அகிற்கூட்டைந்தினொன்று. அஃது காசுக்கட்டி.

எருது

இடபம்
காளை
ஏறு
பகடு

எருத்தம்

தரவு, பிடர்.

எருத்து

ஈற்றயல், பிடர்.

எருந்தி

இப்பி, எராமுட்டி.

எருந்து

உரல், கிளிஞ்சில்.

எருமை

காரா.

எலுமிச்சை

எலும்பிச்சை
சீதளை

எலும்பி

ஒருமரம்.

எலும்பு

என்பு.

எல்லரி

கைமணி.
ஒரு வகை இசைகருவி; அகல வாயையுடைய கருவி
‘கடிகவர் பொலிக்கும் வல்லாய் எல்லரி‘ (மலைபடுகடாம் 10)

எல்லவர்

எல்லாரும்.