எ - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எக்களிப்பு

வெற்றி மகிழ்ச்சி.

எக்கச்சக்கம்

மிக அதிகம்.

எகத்தாளம்

எள்ளல் தன்மை.

எவ்வரும்

யாரும். ஆங்கவை யெவ்வரும் பெறுகிலர் (கந்தபு. மயை யுப. 14).

எவ்வெலாம்

உள்ளவெல்லாம். எவ்வெலாவண்டத் துறைதரு மருத்தும் (கந்தபு. சூரனர. 11).

என்னது

எது. நீ என்னது சொல்கிறாய்.

என்னர்

௯யாவர்
சிறிதும்

என்னாங்கு

என்னிடத்து

எனையவன்

see எனைவன்

எனைவர்

யாவர் எனைவராயினும் (பெருங். வத்தவ. 3, 22).

எனைவன்

யாவன்.

எம்

எம்மை, எம்மால்
'யாம்' என்பது வேற்றுமைப்படுகையிற் றிரிந்திருக்கும் நிலை.

எவள்

யாவள்.

எவன்

யாவன்
யாது, யாவை. வானுயர் தோற்ற மெவன்செய்யும் (குறள், 272). எவ்வண்ணம்
அருளோனாவதை யெவனோ (ஞானா. 46, 6). ஏன். அதிசய விரக்கச் சொல். (சூடா.)

எவை

யாவை.

என்னவன்

யாவன்.
எப்படிப்பட்டவன். நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4).

என்னன்

See என்னவன். என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96).

என்னை

See என்ன.

எவற்று

எது. (யாழ். அக.)

எக்கே

வருத்தக் குறிப்பு. எக்கே யிதுவென் (திவ். பெரியதி. 10, 8, 8).