ப - வரிசை 24 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
புண்

உடலில் ஏற்பட்ட காயம்.

புட்டி

போத்தல்

பற்றி

குறித்து;என்னைப்பற்றிக் கவலைப்படாதே

பாராட்டுபவர்

மெச்சுபவர்

பித்தளை

தாமிரமும் துத்த நாகமும் சேர்ந்த கலப்பு உலோகம்

பட்டை

மரத்தோல்

படை

தானை
சேனை

பிள்

பிலவுண்டாதல்
துண்டி
துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று.
மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr.
விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1).
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8).

பிள்ளு

வெடி

பங்குவீதம்

சம்மாயுள்ள பங்கு
வீதாசாரப்படி

பட்சகாதவாதம்

பட்சவாதம். (சீவரட்.)

பத்திரகிரி

பட்டினத்தடிகள் காலத்து விளங்கிய ஒரு பெரியார்.

பந்துக்குடி

ஒருசார் செட்டிவகுப்பினர்

பாய்கானா

கக்குசு

பிரதக்கு

தனியே
தனியேயுள்ளது

பிரதிவாக்கியம்

பிரதிவசனம்
ஒவ்வொரு வாக்கியத்திலும்.

பிராணாந்திகம்

அந்தியகாலம்
ஆயுள் முடிவுரை. ஆவ்வவர்பிராணாந்திகம்.. குடவோலை எழுதிப்புகவிடப் பெறாதாகவும் (சோழவமி.)

பிறக்கு

பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351).
முதுகு. (நிகண்டு.)
குற்றம். (சூடா.)
ஒர் அசைச்சொல். (தொல். சொல். 281.)

போக்கி

போக்கன்
(யாழ். அக.)
பின்பு. இவை போக்கிச் சொல்லுதும் (தொல். பொ. 444, உரை)
தவிர. கல்யாணகுண விஷயமான இத்தனை போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3, 1, 6).

போக

தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59)
பகுதிப்பொருளில் வரும் ஒரு துணைச்சொல். நான் வரப்போகக் காரியம் நடக்க வில்லை