ப - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
புருஷ லட்சணம்

ஆணுக்குரிய சிறப்பு.

புருஷார்த்தம்

உறுதிப் பொருள்.

புரையிடம்

வீட்டை யொட்டிய காலியிடம்.

புரையேறுதல்

மூச்சுக் குழாயினுள் உணவுப் பொருளில் சிறிது சென்று எரிச்சல் உண்டாதல்.

புலி வேஷம்

புலி வேடம் கொண்டு ஆடுதல்.

புளி மூட்டை

உடல் கொழுத்து விளங்கும் மூடன்.

புளுகன்

பொய் பேசுபவன்

புளுகுணி

புளுகன்

புறுபுறு

கோபம் காணுதலைக் குறிப்பது.

புனப்பாகம்

வடித்த சோற்றை மீண்டும் கொதிக்க வைத்துத் தயாரிக்கும் கஞ்சியுணவு.

புஜம்

தோள் பட்டைக்குக் கீழ் உள்ள கைப்பகுதி.

புஷ்பவதி

பருவமடைந்த பெண்.

புஸ் என்று

ஒன்றுமில்லாமல்.

பீராய்தல்

பலவாறு அலைந்து பணம் சேகரித்தல்.

பிக்கல்

கடன் தொல்லை : தொந்தரவு.

பிசாத்து

அற்பம்.

பிசுபிசுப்பு

ஒட்டும் தன்மை : கைகூடாத தன்மை : வெற்றி பெறாமை.

பிடி கொடுக்காது

மற்றார்க்கு இடம் கொடுக்காதபடி.

பிட்டுவை

வெளிப்படையாகச் சொல்.

பிதுரார்ஜிதம்

தந்தை வழி முன்னோர் சொத்து.