ப - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பௌஜ்தாரி

குற்ற விசாரணைக்குரிய. (C. G.)

பொல்லா

தீமையான. பொல்லாக் கனாக்கண்டார் (சீவக. 2173).
கடுமையான. பொல்லாத மருந்து. (W.)

பேரில்

மீது. அவன்பேரில் குற்றமில்லை.
பிறகு. அவன் சொன்னதன்பேரில் வந்தான்.

பஃது

பத்து. பஃதென்கிளவி யாய்தபக ரங்கெட (தொல். எழுத். 445)

பஃபத்து

நூறு. (தொல். எழுத். 482, உரை.)

பிளித் நாணல் கதிர்குருவி

blyth's reed warbler

பக்குவம்

முதிர்ச்சி

பகிஷ்கரிப்பு

புறக்கணிப்பு

பந்துக்கள்

உறவினர்

பதிஞானம்

இறையுணர்வு

பரம்பரை

தலைமுறை

பவுர்ணமி

முழுமதி

பச்சாத்தாபம்

இரக்கம்

பட்சணம்

சிற்றுண்டி,

பரஸ்பரம்

ஒருவர்க்கொருவர்

பராக்கிரமம்

பேராண்மை

பரிகாசம்

ஏளனம், நையாண்டி

பரிகாரம்

விடிவு

பரிச்சயம்

பழக்கம்,அறிமுகம்

பரிசீலனை

ஆய்வு