ப - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பலனுள்

ஒன்று பெயர்ச்சொற்குறி

பஞ்சம்ஹிஸ்ஸா

ஐந்திலொருபகுதி

பல்

See பல

பல்லவர்

பலர். பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு).

பல்லார்

பலர். பல்லா ரகத்து (குறள், 194).

பல

ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல் எழுத்.220)

பலபல

அனேகமானவை. (தொல்.எழுத்.215, உரை.)

பலர்

அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7).
சபை. (சது.)

பொதுக்கோ

சடக்கென புள்ளிதுவென்று பொதுக்கோவாய் கீண்டிட்ட (திவ். பெரியாழ். 2, 5, 4).

பப்ப

இகழ்ச்சிக்குறிப்பு பப்பவப்பர்(திவ்.பெரிய தி.1, 3, 7).

பளபளா

இன்மைக்குறிப்பு.
See பளாபளா.

பளா

See பளாபளா.

பளாபளா

அதிசயக்குறிப்பு. பளாபளாவதிக வெகுமானமாகும் (திருவேங்.சத.29).

பகிர்

வெளிப்புறம். பகிர்ப்படக் குடரைக் கொய்யும் (கம்பரா. இரணிய. 138.)

பகு

அதிகமான பகுவொளிப் பவழஞ்் செவ்வாய் (சீவக. 2801).

பூகா

பசித்த. பூகாப்பக்கிரி. (C. G.)

பூங்கு

பல (நாமதீப. 772.)

பேகூப்

முடமான. (C. G.)

பேபராக்கு

See பேபர்வா

புக்கா

பசியுள்ள. (C. G.)