ப - வரிசை 4 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பிரமாதம்

நேர்த்தி
அருமை : மிகவும் சிறப்புடையது.

பிரமை

மனமயக்கம்(மயக்க உணர்வு)

பிரமாணம்

உண்மை என்று நிறுவுதற்குரிய ஆதாரம்.

பிரபலம்

புகழ்.

பிரபஞ்சம்

அண்டம் : பெரு வெளி.

பிரதேசம்

நிலப்பகுதி.

பிரதிஷ்டை

தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கு.

பிரதாபம்

சிறப்புகள் : பெருஞ் சாதனை.

பிரசித்தம்

நன்கு அறிமுகமானது.

பிரகடனம்

அறிவிப்பு
சாற்றுகை

பித்தலாட்டம்

பொய்ச்செயல்.

பிடிமானம்

அக்கறை.

பிசுக்கு

அழுக்கு.

பிசினாறி

கஞ்சன்.

பிசிர்

பயனற்றது.

பிசகு

தவறு : உறுப்பு பிசகுதல்: சுளுக்கு.

பிகு

இறுக்கம்
பிகுவு : தற்பெருமை.

பீத்தல்

தற்பெருமைப் பேச்சு.

புஷ்டி

பருமன்.

புக்கை

அரிசியையும் பருப்பையும் சேர்த்துக் குழைவாக வடித்துச் செய்யும் உணவு.