த - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தள்ளாமை

முதுமையின் தளர்ச்சி.

தவக்கம்

தாமதம்.

தயார்

உடனடியான நிலை உருவாதல்.

தடபுடல்

மிகுந்த ஆடம்பரம்.

தாரதம்மியம்

ஏற்றத்தாழ்வு.

தாம்பாளம்

பெரிய தட்டு.

தாக்கீது

நீதிமன்ற உத்தரவு.

துல்லியம்

மிகச் சரியானது
பிழையற்ற

துர்லபம்

அரிது : கடினம்.

துணிகரம்

பாவச் செயலை அச்சமின்றி செய்தல்.

துடுக்கு

குறும்புத்தனம்.

துச்சம்

அற்பப் பொருள் : பொருட் படுத்தாமை.

தூஷணம்

வகைச்சொல் : அவ மதிப்பு.

தூற்று

அவதூறு செய்.

தை

சுறவம் ( 30 ) ( 14 jan)
மனதை துன்புறுத்தல்

தங்கள்

உங்களுடைய.
See தம். தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344).
கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்கு மொழி. தங்கள் இராமன். Mod.

தாங்கள்

மரியாதை குறிக்கும் முன்னிலைப் பன்மைச்சொல். தாங்கள் எப்போது வந்தீர்கள்.

தந்தாம்

தங்கள் தங்களுடைய. ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே (ஈடு, 2, 2, 10) .

தன்

தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு.

தான்

படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248).
சுயம். தானாகப் படித்தவன்.
தேற்றச்சொல். உனைத் தான் நோக்கி நிற்கும் (வெங்கைக்கோ. 41).
அதைச்சொல். தாந்தான் கின்று நின்றசைமொழி (நன்.441). அதுவன்றி இஃது ஒன்று என்று பொருள்படுவதோர் இடைச்சொல். (திருக்கோ. 382, உரை.)