ஆ - வரிசை 38 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆத்தியோபாந்தம்

ஆதியந்தம்.

ஆத்திரக்காரன்

அவசரமுடையவன்.

ஆத்திரக்காரி

அவசரமுடையவள்.

ஆத்துமகத்தியை

தற்கொலை.

ஆத்துமசந்தேகம்

உள்ளையம்.

ஆத்துசன்

மகன்.

ஆத்துமசிநேகம்

நெருங்கியவுறவு.

ஆத்துமசை

மகள்.

ஆத்துமஞானம்

ஆத்துமாவை அறியும்அறிவு.

ஆத்துமதரிசகம்

ஆத்துமநிலையறிதல்.

ஆத்துமபோதம்

ஆத்துமஞானம்.

ஆத்துமவசம்

தன்னடக்கம்.

ஆநந்ததம்

யோனி.

ஆநந்தத்தாண்டவன்

நடேசன்.

ஆநந்தநித்திரை

யோகநித்திரை.

ஆநந்தப்படம்

கூறைப்புடவை.

ஆநந்தபரவசம்

ஆநந்தக்களிப்பு.

ஆநந்தபைரவி

ஓரிராகம்.

ஆநந்தப்பிரபவம்

இந்திரியம்.

ஆனந்தமயன்

கடவுள்.