எ - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
எத்தனி

முயற்சி செய்

என்று

என்றுசொல்லி.
In special or elliptical constructions, in which it is used as a connective part.
(a) between verbs, as in நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11)
(b) between a noun and a pronoun, as in பாரியென் றெருவனுளன்
(c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்:நரை வரு மென்றெண்ணி (நாலடி, 11)
பாரியென் றெருவனுளன்
திடீரென்றுவந்தான்
ஒல்லென் றொலித்தது
பச்சென்று பசந்தது
வினை பெயர் குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றி வரும் இடைச் சொல். (தொல். சொல். 261, உரை: நன். 424.)
ஒரு சொல்லசை
கலியாணத்துக்கென்று பணம் வைத்திருக்கிறேன்.

என்ன

யாது

என

என்று (தொல். சொல். 260.)
ஒருவமவுருபு
புலியெனப் பாய்ந்தான்

எனை

எல்லாம். சுட்டுணர்வெனப்படுவ,தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62)
எவ்வளவு
எனைப்பகை யுற்றாரும் (குறள், 207).

எழிலி

மேகம்

எக்கழுத்தம்

இறுமாப்பு

எடை

திடப்பொருளின் நிறை.
கனம், பாரம்

எய்யுந்தொழில்

எய்யுந்தொழில். ஏமாண்ட நெடும்புரிசை (பு. வெ. 5, 5).

எழுத்துப்பட்சி

உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.)

எதிர

ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)

எறே

எறே. (அகநா. 41, உரை.)

என்ப

அசைச்சொல். (தொல். சொல். 298, உரை.)

என்ற

ஓர் உவமவாய் பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ. 286, உரை).

எனா

Connective of things enumerated, as in நிலனெனா நீரெனா
ஓரெண்ணிடைச் சொல். (நன். 428.)

எந்தானம்

பொருட்கள் வைக்கு உயரமான இடம்

எழுத்திலக்கணம்

அக்கரவிலக்கணம்

எழுத்தாற்றல்

லிகிதம்

எடுத்துச்சொல்லுதல்

அறிவு கூறுதல்

எடுப்பார் கைப்பிள்ளை

சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்