ஆ - வரிசை 21 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆண்டையர்

மனிதர்.

ஆதண்டை

காற்றோட்டி.

ஆதிகம்

சிறுகுறிஞ்சா.

ஆதித்தர்

வானோர்
அதிதி மக்களான தேவர்

ஆதித்தர்

வைகத்தன்
விவச்சுதன்
வாசன்
மார்த்தாண்டன்
பாஸ்கரன்
ரவி
உலோகப் பிரகாசன்
உலோக சாட்சி
திரி விக்ரமன்
ஆதித்தன்
திவாகரன்
அங்கிச மாலி

ஆதிபன்

அரசன், எசமானன்.

ஆதிரம்

நெய்

ஆதிரவிச்சிலை

காவிக்கல்.

ஆதிவிராகன்

அரகன், சிவன், சோரபாஷாணம்.

ஆதுவம்

கள்.

ஆதெரிசம்

கண்ணாடி.

ஆத்தி

அச்ச வியப்புக் குறிப்பு. ஆத்தி! அங்கே போகாதே
ஆத்தி மரம்

ஆஸ்திகன்

ஏகேச்சுரவாதி.

ஆத்திரதம்

இஞ்சி.

ஆத்துமபுத்தர்

பூனைக்காலி.

ஆஸ்தை

நிலை.

ஆந்தனையும்

அமளவும்.

ஆந்தோளி

ஓரிராகம், ஒருவகைச் சிவிகை.

ஆபணம்

கடை, கடைவீதி.

ஆபதம்

ஆபத்து.