அ - வரிசை 250 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அமானிக் கள்ளு

புளிக்காத கள்ளு

அமெரிக்கன் மா

கோதுமை மா

அயத்துப் போதல்

மறந்து போதல்

அயந்து போதல்

நித்திரையாதல்

அயந்தைக்கேடு

மறதி

அயலட்டம்

அக்கம்பக்கத்தில் உள்ளோர்

அரக்கரவாசி

கணிசமான அளவு தொகை

அரச மரியாதை

மிகச் சிறந்த மரியாதை

அரண

பிரித்தல் குறி

அரிசிக்குறுநல்

அரிசி நொய், நெல்குத்தும் போது வரும் உடைந்த அரிசி

அரிக்கன் அரிசி

அரக்கன் யோமா என்ற பர்மியத் துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருவகை அரிசி

அரிக்கன் ஆடு

அரக்கன் யோமா என்ற பர்மியத் துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஆட்டினம்

அரிக்கன் பச்சை

அரக்கன் யோமா என்ற பர்மியத் துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருவகைப் பச்சையரிசி.

அரிக்கன் லாம்பு

புயலிற்கும் அணையாமல் இருக்கக் கூடியது என்ற கருத்தினைக் கொண்ட மண்ணெண்ணெய் விளக்கு

அரிச்சினைக் கடை

பொருட்கள் வாங்க எந்த நேரமும் மக்கள் குவிந்து காணப்படும் கடை என்ற கருத்து

அரிசிக் குறுணல்

உடைந்த அரிசி

அரிசி குடுத்தல்

அந்தியேட்டி, திவசம் முதலிய பிதிர்க் காரியங்களை செய்தல்

அரிதட்டு

மா அரிக்கும் தட்டு, மணலில் உள்ள கஞ்சல் குப்பைகளை நீக்க மேசன் பாவிக்கும் தட்டு

அரியதுரம்

சீனியும் மாவும் சேர்த்து செய்யப்படும் மென்மையான ஒரு இனிப்பு பலகாரம்

அரிவாட்சொண்டன்

ஒருவகை கொக்கு