அ - வரிசை 242 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அடுக்குப்பெட்டி

பனையோலையால் இழைக்கப்படும் சிறிய பெட்டித் தொகுதிகள். ஒன்றுக்குள் ஒன்று வைக்கக்கூடியதாக இவை அமைகின்றன.பெரும்பாலும் சமையலறை உபகரணமாகப் பயன்படுகிறது.வெங்காயம், மிளகாய், உப்பு, மல்லி, சீரகவகை போன்றவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடியதாக இது இருக்கிறது. மூன்று தொடக்கம் ஆறு வரையிலான பெட்டிகள் ஓர் அடுக்குப் பெட்டியிற் காணப்படும். பெரிய பெட்டிகளிலும் அடுக்குப் பெட்டி இழைக்கப்படுவதுண்டு.

அத்துவைதம்

ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக்கூறும் கொள்கை. இரண்டன்மை, அல்லிருமை, அத்வைதம்

அண்ணாவியார்

பண்டைய நாட்களில் நாட்டுக்கூத்து பழக்கி நெறிப்படுத்தி மேடையேற்றுபவர். நடிகர்கள் எவ்வாறு நடிப்பது, வசனம், பாடல்களில் எங்கே உச்சரிப்பு கூட்டிக்குறைப்பது போன்ற விடயங்களை இவரே தீர்மானிப்பார். இன்று இப்பணிகளைச் செய்பவர் நெறியாளுனர் அல்லது இயக்கு நர் எனப் பெயர் பெறுகிறார்.

அவனிகை

திரை, இடுதிரை

அவாச்சியன்

குறிப்பிடத்தகாதவன்

அந்தணர்

வேதியர்

அடையான்

ஏற்காதவன்

அமர்புடையார்

விருப்பமுடையார்
சேர்ந்துவாழ்பவர்

அகறல்

அகன்றுபோதல், நீங்கிப்போதல்

அருந்தகம்

மென்பானவகை அருந்திச் செல்லக் கூடிய இடம்

அளகு

பெண் மயில்

அல்லங்காடி

அல்(இரவு) + அங்காடி

அடுக்கு நந்தியாவட்டை

இதுவும் நந்தியாவட்டைபோன்றதுதான் ஆனால் இரண்டு, முன்று அடுக்குகள் காணப்படும்.

அறுபத்து நான்கு கலைகள்

எழுத்திலக்கணம்
எழுத்தாற்றல்
கணிதவியல்
மறை நூல்
தொன்மம்
இலக்கணவியல்
நய நூல்
கணியக் கலை
அறத்துப் பால்
ஓகக் கலை
மந்திரக் கலை
நிமித்தகக் கலை
கம்மியக் கலை
மருத்துவக் கலை
உறுப்பமைவு
மறவனப்பு
வனப்பு
அணி இயல்
இனிதுமொழிதல்
நாடகக் கலை
ஆடற் கலை
ஒலிநுட்ப அறிவு
யாழ் இயல்
குழலிசை
மத்தள நூல்
தாள இயல்
வில்லாற்றல்
பொன் நோட்டம்
தேர்ப் பயிற்சி
யானையேற்றம்
குதிரையேற்றம்
மணி நோட்டம்
மண்ணியல்
போர்ப் பயிற்சி
கைகலப்பு
கவர்ச்சியியல்
ஓட்டுகை
நட்பு பிரிக்கை
மயக்குக் கலை
புணருங் கலை
வசியக் கலை
இதளியக் கலை
இன்னிசைப் பயிற்சி
பிறவுயிர்மொழி
மகிழுறுத்தம்
நாடிப் பயிற்சி
கலுழம்
இழப்பறிகை
மறைத்ததையறிதல்
வான்புகுதல்
வான் செல்கை
கூடுவிட்டு கூடுபாய்தல்
தன்னுறு கரத்தல்
மாயம்
பெருமாயம்
நீர்க் கட்டு
அழற் கட்டு
வளிக் கட்டு
கண் கட்டு
நாவுக் கட்டு
விந்துக் கட்டு
புதையற் கட்டு
வாட் கட்டு
சூனியம்

அறைகலன்

அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை, நாற்காலி, மேசை, கட்டில், மெத்தை முதலிய சாமான்கள்

அரிவாண்மணை

விட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கூரிய வாளுடன் இருக்கும் அமரக்கூடிய பிடி.

அவம்

கேடு, தீமை

அரையர்

வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் ஆண் இறைத் தொண்டர்களை அழைக்க பயன்படுத்தும் வார்த்தை.

அத்தி வரதர்

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள்

அக்கை

அக்கா