அ - வரிசை 218 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகலுள்

அகலம்
ஊர்
நாடு
பெருமை

அகழு

தோண்ட

அகாதம்

ஆழம்
பொந்து
நீந்துபுனல்
வஞ்சகம்

அகாத்தியம்

பொல்லாங்கு

அகாரணம்

தற்செயல்

அகாரம்

அ - ஓரெழுத்து.
மெய்யெழுத்தையியக்குஞ்சாரியை

அகாரியம்

காரியமற்றது

அகி

பாம்பு
இரும்பு
அகிபுசம்

அகிகை

இலவு

அகிஞ்சனன்

தரித்திரன்

அகிதம்

இதமின்மை
பகை
ஏலாமை
உரிமையின்மை
அகிதர்

அகிருத்தியம்

அக்கிரமம்

அகீர்த்தி

துர்க்கீர்த்தி

அகுணம்

குற்றம்
குணவீனம்
இலட்சணமின்மை
அகுணி

அகும்பை

A plant, as கவிழ்தும்பை

அகூபாரன்

ஆதிகூர்மம்

அகை

ஒடிக்க
முரிக்க
அடிக்க
செலுத்த
வருத்த
அறுக்க
எழுப்ப
அகைப்பு(n.)

அகைப்புவண்ணம்

அறுத்தறுத்தொழுகுஞ்சந்தம்

அகோசரம்

அறியொணாமை

அகோதாரை

மிகப்பொழிகை
அகோதாரையானமழை