ப - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பகந்திரை

சிவதை

பெயரெச்சம்

பெயர் கொண்டு முடியும் வினைக்குறை
பெயரெச்சம் = பெயர் + எச்சம்
வினைமுற்றி நில்லாமல் எஞ்சி நிற்பது (முடியாமல் இருப்பது) எச்சம் எனப்படும். முற்றுப் பெறாத ஒருவினைச் சொல். ஒரு பெயரைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம்

பிரதிப்பெயர்

பெயர்ச்சொல்லுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் சொல்
எ.டு : அவன்,இவன்
இதை மறுபெயர்,பதிற்பெயர் என்றும் அழைப்பார்கள்

புள்ளிவிபரவியல்

புள்ளிவிபரம், புள்ளியியல் என்பன தரவுகளை ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியலாக சிலர் கருதுகிறார்கள் மற்றும் சிலர் அதனை தரவுகளை சேகரித்து அதன் பொருளை புரிந்துகொள்ளும் கணிதத்தின் ஒரு கிளையாக கருதுகின்றனர். புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து மற்றும் மாதிரி மதிப்பீடுகள் மூலம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துகிறார்கள் தரவுகள் மற்றும் புள்ளியியல் மாதிரிகளை பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை ஊகிக்கவும் மற்றும் எதிர்காலத்தை அனுமானிக்கவும் புள்ளியியல் ஒரு கருவியாக பயன்படுகிறது. புள்ளியியல் பலதரப்பட்ட துறைகளில் பயன்படுகிறது, கல்வி சார்ந்த துறைகளில், இயற்கை மற்றும் சமுதாய அறிவியல், அரசு, மற்றும் தொழில் அல்லது வணிகம் போன்றவை அடங்கும்.
புள்ளிவிபரமுறைகளை கொண்டு தரவுகளின் சேகரிப்பை தொகுத்து அளிக்க இயலும்: இதனை விளக்கமான புள்ளிவிபர முறை என்று அழைக்கின்றனர். ஆய்வுகளின் தீர்வுகளை வெளிப்படுத்த, இந்த முறை ஆராய்ச்சிகளில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, தன் போக்கிலமைந்த மற்றும் சமவாய்ப்புள்ள நிலையிலான மாறும் நிலையில்லா வகையிலான தரவுகளில் உருப்படிமங்களை முன்மாதிரியாக வைத்து அவதானித்து, மற்றும் அதிலிருந்து அதன் செய்முறை அல்லது அதன் இனத்தொகையை ஆராய்ந்து கணிப்பதை; அனுமான புள்ளியியல் என அறியப்படுகிறது. அறிவியற் பூர்வமாக முன்னேற்றம் அடைய அனுமானம் ஒரு முக்கிய அங்கமாகும், ஏன் என்றால் ஒரு தத்துவம் தர்க்க பூர்வமாக எங்கு செல்லும் என்பதை முன்கூட்டியே அறிய (தரவுகளின் அடிப்படையில்) அது வழிவகுக்கிறது. வழிகாட்டும் தத்துவத்தை நிரூபிக்க, இவ்வகையான கணிப்புகளை சோதித்தும் பார்ப்பதுண்டு, அப்படி செய்வது அறிவியல் முறைகளின் ஒரு பங்காகும். அனுமானம் உண்மையாக இருந்தால், அப்போது புதிய தரவுகளின் விளக்கமான புள்ளிவிபரங்கள் அது அந்த கருதுகோளின் வலுவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. விளக்கமான புள்ளியியல் மற்றும் உய்த்துணர் புள்ளியியல் (யூகிக்கும் புள்ளிவிபரங்கள் என்றும் அறியப்படுவது) இவை எல்லாம் சேர்ந்து செயல்முறை சார்ந்த புள்ளியியல் அல்லது புள்ளிவிபரங்கள் என அறியப்படுகிறது.

பெயர்ச்சொல்

ஒரு பொருளை அடையாளப்படுத்த பயன்படும் சொல்
உயிர் உள்ளவை உயிரற்றவை, கருத்துப்பொருள்கள், இடங்கள், முதலானவற்றைக் குறிக்கும் சொல்; ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல்

பொலிஸ்

காவற்றுறை

புத்தக விற்பனை நிலையம்

பொத்தகசாலை

பந்தோபஸ்து

பாதுகாப்பு

பிடி

யானை

பொன் விழா

50 ஆண்டுகள்

பவள விழா

75 ஆண்டுகள்

பரத நாட்டியம்

இந்திய நடன வகையில் ஒன்று

பஞ்ச பாண்டவர்

தருமன்
வீமன்
அருச்சுனன்
நகுலன்
சகாதேவன்

பஞ்ச சபைகள்

திருவாலங்காடு _ இரத்தின சபை
தில்லை _ பொற் சபை
மதுரை _ வெள்ளி சபை
திரு நெல்வேலி _ தாமிர சபை
திருக்குற்றாலம் _ சித்திர சபை

பஞ்ச சீலம்

ஐவகை ஒழுக்கம்

பஞ்ச திராவிடம்

தமிழ் நாடு
ஆந்திரம்
கன்னடம்
கேரளம்
மராட்டியம்

பஞ்ச பூதம்

நிலம்
நீர்
நெருப்பு
ஆகாயம்
காற்று

பஞ்ச மூலம்

செவ்வியம்
சித்திர மூலம்
கண்டு பரங்கி
பேரரத்தை
சுக்கு

பஞ்சவாசம்

இலவங்கம்
ஏலம்
கருப்பூரம்
சாதிக்காய்
சுக்கு

பஞ்சமா பாதகம்

பொய்
கொலை
களவு
கள்ளுண்ணல்
குரு நிந்தை