த - வரிசை 9 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தூங்கி வழிதல்

சுறுசுறுப்பின்றி மந்தமாதல்.

தூபம் போடுதல்

ஒருவர் கோள் சொல்ல ஏனோர் உடன் பேசுதல்.

தூரதிருஷ்டி

எதிர் கால நிலையை அறிதல்.

தூஷித்தல்

பழித்தல்.

துக்கடா

சிறியது
முக்கியமில்லாதது
சிறுதுண்டு
உணவிற்குரிய பச்சடிமுதலிய உபகரணம்
அற்பமான; துக்கடா வேலை

துக்கிரி

விரும்பத் தகாதது : அமங்கலத் தன்மை.

துடிதுடிப்பு

துன்பத்தின் மிகுதி.

துடியான

சுறுசுறுப்பான.

துணுக்குறுதல்

மன நடுக்கம் : அடைதல்.

துணை போதல்

பாவச் செயலுக்கு உதவுதல்.

துண்டு விழுதல்

பணப் பற்றாக் குறை.

துதி பாடுதல்

புகழ்ந்து பேசுதல்.

துப்பட்டி

சால்வை.

துப்புக் கெட்டு

திறமையில்லாது.

துருதிர்ஷ்டம்

நற்பேறின்மை.

துரு துரு என்று

சுறு சுறுப்பு.

துருப்புச் சீட்டு

ஒருவரை வயப் படுத்த அவர்க்கு பிரியமானதைத் தன்பால் கைக் கொண்டு செயல் மேற் கொள்ளுதல்.

துவம்சம்

நாசம் : அழிவு.

துஷ்டன்

தீய செய்பவன்.

துஷ்பிரயோகம்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.