போ

"போ" என்பதன் தமிழ் விளக்கம்

போ

(ஒலிப்புமுறை) ISO 15919: //

(வினைச்சொல்) செல்லுதல். மாமலர் கொய்ய . . . யானும் போவல் (மணி. 3, 83).
அடைதல். (W.)
உரியதாதல். (W.)
பிறத்தல். வணிகர் மரபிற் போந்தோன் (உபதேசகா. சிவபுண். 153).
நீண்டு செல்லுதல். தென் கரைக்கு நடுவாகப்போயின இடைகழி (T. A. S. i, 189).
தகுதியாதல். அப்படிச் செய்யப்போகாது. (W.)
நெடுமையாதல். (தொல். சொல். 317.) போகித ழுண்கண். (பு. வெ. 11, ஆண்பாற். 3).
நேர்மையாதல். வார்தல் போகல் . . . நேர்பு நெடுமையும் செய்யும்பொருள் (தொல். சொல். 317).
பரத்தல். விசும்பினு ஞாலத் தகத்தும் வளியே யெதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144, 40).10.
நிரம்புதல். நலந் துறை போய நங்கை (சீவக. 2132).1
மேற்படுதல். ஆயிரமல்ல போன (கம்பரா. மாயாசனக. 14)
ஓங்குதல். கள்ளிபோகிய களரியம் பறந்தலை (புறநா. 237)
நன்கு பயிலுதல். முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வுத்தமக்கவி (கம்பரா. சிறப்புப். 9)
கூடியதாதல். மூச்சு விடப் போகவில்லை
பிரிதல். புலம்பப் போகாது (பரிபா. 11, 118)
ஒழிதல். மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10)
நீங்குதல். நூல் போன சங்கிலி (பதினொ. திருத். திருவந். 69)
கழிதல். போய காலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10).1
To vanish, disappear
மறைதல். ஒளியவன் . . . தேரும் போயிற்று (திவ். பெரியதி. 8, 6, 6)
காணாமற் போதல். போன பொருள் திரும்பாது
மாறுதல்
கழிக்கப்படுதல். ஆறிலே இரண்டு போக
வகுக்கப்படு்தல். நூறில் பன்னிரண்டு எட்டுத்தரம் போகும்.2
சாதல். தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் (தேவா. 692, 2)
முடிவாதல். இன்பமாவதே போந்த நெறி என்றிருந்தேன் (தாயு. சின்மயானந்த. 5)
ஒலியடங்குதல். முரசெலாம் போன (கம்பரா. முதற்போ. 237)
புணர்தல். அவளோடு போனான்
தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை. அதைச் செய்யப்போகிறான்
பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணைவினை. தூங்கிப் போனான்

(வினைச்சொல்) To go, proceed; to go away, depart
To reach a destination
To belong
To be born
To lie, pass through, as a path
To be proper, admissible, passable
To become long; to be stretched out
To become straight
To extend, spread
To be full
To exceed transcend
To shoot up; to be tall
To become expert in
To undergo, experience; to go through the process of
To separate
To cease
To leave, abandon
To go by, pass over; to lapse
To be missing, to be lost
To change, as from one state to another
To be subtracted
To be divided
To perish, die
To be conclusive
To be hushed
To cohabit
An (aux.) (a.) expressing what is about to happen
(b)emphasising the meaning of the main verb

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » ஆசை முகம் மறந்து போச்சே
  • நாட்டுப்புற பாடல்கள் » நிற்கட்டுமா போகட்டுமா
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » பள்ளிக் கூடம் போகலாமே
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » மரம் வளர்ப்போம்!
  • இலக்கணம் » அணி » வஞ்சப் புகழ்ச்சியணி » புகழ்வது போல் இகழ்தல்
  • இலக்கணம் » அணி » வஞ்சப் புகழ்ச்சியணி » இகழ்வது போல் புகழ்தல்
  • குண்டலகேசி » மன்னனைப் போற்றுதல்
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » போர் அடிவலியின் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » போர் சிறப்பு
  • போ என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.