வ - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
விஞ்ஞானம்

அறிவியல்

வார்த்தை

சொல்

வஸ்திரம்

ஆடை.

வரிசை

சீர் வரிசை.

வயணம்

ருசியான உணவு.

வதுவை

திருமணம்.

வசூலி

பணம் பெறு.

வசனம்

உரையாடல்.

வசதி

வாய்ப்பு
அனுகூலம்
சுகம்

வங்கு

சரும நோய் வகை.

வக்கு

திறன் : ஆற்றல்.

வக்கிரம்

கோணல்

வக்காலத்து

மற்றொருவர்க்காகப் பரிந்து பேசுதல்.

வக்கணை

துடுக்காகப் பேசுதல்.

வாஸ்தவம்

உண்மை
மெய்மை

வாலாயம்

வழக்கமானது.

வாய்தா

மற்றொரு நாளுக்குத் தள்ளி வைத்தால் :நிலவரி.

வாடிக்கை

இயல்பு
தொடர்ந்து நிலவுவது.

வாகடம்

வைத்திய நூல்.

விஸ்தாரம்

விரிவு.