ப - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பொட்டை

குருடு : வீரமில்லாதவன்.

பொத்தான்

பித்தான் ( காண்க)

பொத்து

உள்ளங்கையில் மூடுதல்.

பொத்துக் கொண்டு வருதல்

துக்கம் அல்லது சினம் திடீரெனத் தோன்றுதல்.

பொது ஜனம்

பொது மக்கள்.

பொய்க்கால்

மரக்கட்டை.

பைஜாமா

இறுக்கம் இல்லாத கால் சட்டை.

பேக்கு

அறிவற்றவன்.

பேசா மடந்தை

மெளனம் சாதிப்பவள்.

பேச்சு வாக்கில்

முக்கியம் காட்டாதவாறு.

பேச்சு வார்த்தை

சமாதான நாட்டத்தில் பேசி வழக்கைத் தீர்த்தல்.

பேத்தல்

உளறுதல் : பிதற்றல்.

பேந்தப் பேந்த

ஒன்றும் புரியாமல் விழித்தல்.

பேரண்டம்

பிரபஞ்சம்.

பேர்வழி

ஆள்.

பேறு காலம்

மகப் பேறு தருணம்.

பேனா நண்பர்

கடித வாயிலான நண்பர்.

பேஜார்

சிரமம் : தொந்தரவு.

பேஷாக

மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தருவது.

பெட்டிக் கடை

சிறிய கடை.