உ - வரிசை 59 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உலப்பு

ஒழிவு, கேடு, சாவு.

உலர்த்தி

சூலை, ஒருநோய்.

உலர்த்துதல்

காய்ச்சுதல்
உலரச் செய்தல்

உலர்ந்ததேங்காய்

கொப்பறை.

உலர்மரம்

வானம்.

உலர்வு

உலர்ச்சி.

உலவமரம்

இலவமரம்.

உலவல்

உலவுதல்.

உலவைநாசி

திப்பிலி.

உலாத்துக்கதவு

பிணையற்கதவு.

உலாமா

கச்சமரம்.

உலுக்கல்

குலுக்கல்.

உலுக்குமரம்

மிண்டிமரம்.

உலுத்தகன்

வேடன்.

உலுத்தத்தனம்

உலோபத்துவம்.

உலுப்பைம்பை

சாமான்பை.

உலுலாயம்

காட்டெரூமை.

உலூகலகம்

குங்கிலியம்.

உலூகாரி

காக்கை.

உலூபி

உருவகைமீன்.