இ - வரிசை 103 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இழுத்தெறிதல்

மிக விரைவாக கருமம் ஒன்றை மேற்கொள்ளல்

இழுப்பாணி

கலப்பையை நுகத்தில் பூட்ட பயன்படுத்தும் பெரியதொரு ஆணி

இழுத்தாணி சப்பாணி

செயல் ஒன்றினை மெதுவாகவும் இடைவெளி பல விட்டும் பிற்போட்டும் செய்யும் பண்பினை கொண்ட நபர்

இழுபடுதல்

முறையாக பயன்படுத்தப்படாமல் அநியாயமாகிறது என்ற கருத்து

இழுபறிப்படுதல்

முரண்படுதல்

இழுபாடு

இணக்கமற்ற நிலை, முடிவுக்கு வராமல் இருத்தல்

இழுவிண்டல்

விடயம் ஒன்று நீண்டகாலமாக தீர்வு காணப்படாது இருத்தல்

இழுவைக் கயிறு

பயிர்களை நிரையாக நாடும் பொருட்டு நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் இடப் பயன்படுத்தப்படும் நீண்ட தேடா கயிறு

இழைக்கட்டுதல்

தனக்கு தீங்கு செய்த ஒருவருக்கு கேடு விளைய வேண்டி கடவுள் சிலை முதலியவற்றில் சீலை துண்டு அல்லது நூல் கட்டுதல்

இழைத்தல்

ஓலை முதலியவற்றை கொண்டு பை, பாய் முதலியன பின்னுதல்

இளக்கயிறு

வேலி வரிதல், கட்டுதல் முதலியவற்றிற்கு பயன்படும் தென்னம் தும்பினால் திரிக்கப்பட்ட மெல்லிய கயிறு

இளக்களித்தல்

பொரித்த அப்பளம் முதலானவை மொருமொருப்பு தன்மையை இழத்தல்

இளகுதல்

இரக்கம் கொள்ளுதல், ஈதல், தணிதல், மொருமொருப்பு தன்மையை இழத்தல்

இளங்கண்டுப்பால்

கன்று ஈன்று சில காலமே ஆகிய பசுவிலிருந்து கறக்கப்படும் தடிப்பு குறைந்த பால்

இளந்தாரி கோயில்

ஒரு சிறு தெய்வ வழிபாட்டு இந்து கோயில்

இளநாக்கடித்தல்

ஒன்றைப்பற்றி, ஒருவரை பற்றி சற்று குறைத்து கூறல், உறுதியாக சொல்லாமல் மழுப்புதல்

இளநீர்க் கோம்பை

இளநீர் குடித்த பின் மிஞ்சும் இளநீர் குடுவை

இளமைபெயர்தல்

மனநிறைவு, சிறந்த உணவு முதலியவற்றினால் ஒருவர் தனது முன்னைய நிலையிலும் பார்க்க இளமையான தோற்றத்தை பெறுதல்

இளவாளித்தல்

பொரித்த அப்பளம் போன்றவை ஈரப்பதன் காரணமாக மொருமொருப்பினை இழத்தல்

இளைப்பாறல்

வேலையில் இருந்து ஓய்வு பெறல்