இ - வரிசை 98 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இங்கினை

ஏறத்தாள இந்த இடத்தில்

இங்கேர்

இங்க பார்

இங்கேரடா

ஆண் ஒருவரை சுட்டி இங்கே பார் எனக் குறிப்பிடும் முறை

இங்கேரடி

பெண் ஒருவரை சுட்டி இங்கே பார் எனக் குறிப்பிடும் முறை

இசக்குப் பிசக்காக

தவறாக, முறைதவறி

இசங்கி முசங்கி

இயலாத நிலையிலும் முயன்று செயற்படல்

இஞ்சாருங்கோ

கணவனை மனைவி விளிக்கும் முறை

இஞ்சார்

கணவன் மனைவியை கூப்பிடும் முறை

இஞ்சின்

இயந்திரம்

இஞ்சுப்பெத்தர்

பரிசோதகர்

இஞ்சேர்

இங்க பார், கணவன் மனைவியை கூப்பிடும் முறை

இட்டல் இடைஞ்சல்

துன்பம், ஏழ்மை

இட்டு முட்டு

இடநெருக்கடி கொண்ட, சாப்பிட்ட பின் ஏற்படும் அசெளகரியத் தன்மை

இடங்காண்

மற்றவர்கள் நெகிழ்ச்சியாய் இருப்பதை புரிந்து தன்னிஷ்டப்படி நடத்தல்

இடத்தில் நிற்றல்

விலகி நிற்றல்

இடப்பு

பெரிய கட்டியாகக் காணப்படும் மண், புண்ணாக்கு, அரப்பு போன்றவை

இடப்புப் பெயர்த்தல்

கட்டி கட்டியாக எடுத்தல்

இடம்புதல்

மீறுதல், உச்சுதல்

இடம் வலம்

ஒரு இடம் அமைந்துள்ள இடம் மற்றும் அதற்கு எவ்வாறு செல்வது என்ற விபரம்

இடறிவிடுதல்

நிராகரித்தல், குழப்புதல்