ஆ - வரிசை 63 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆசையம்மா

தாயின் சகோதரி, தாய்க்கு அதிக சகோதரிகள் இருப்பின் ஒருவரை இவ்வாறழைப்பர்

ஆஞ்சோஞ்சு

நன்கு ஆராய்ந்து தெளிந்து

ஆட்டக்காறர்

பகட்டுத்தனமும் ஒழுக்க விழுமியங்களை சற்று மீறி நடக்கும் தன்மையும் கொண்டவர்கள், நடனமாடுவோர்

ஆட்டக்காறி

ஒருவகை நெல்லினம், ஆட்டக்காறர்

ஆட்டத்திவசம்

ஆட்டைத்திவசம். ஒருவர் இறந்த திதி ஒரு வருட முடிவில் வரும் போது பின்பற்றப்படும் பிதிர்க் கிரியை

ஆட்டம் காட்டுதல்

பகட்டை வெளிப்படுத்துதல் என்ற இழிகுறிப்பு

ஆட்டிப்படைத்தல்

ஒருவர் மிகுந்த சிரமத்தை இன்னொருவருக்கு வேண்டுமென்றே கொடுத்தல்

ஆட்டுதல்

விடயம் ஒன்று தொடர்பில் ஒருசாரார் எடுக்கும் மிகத் தீவிரமான செயற்பாடு

ஆட்படுத்துதல்

வளர்த்து ஆளாக்குதல்

ஆட்படுதல்

(பிள்ளைகள்) பொறுப்பேற்கும் பருவம் அடைந்துவிடல், வாழ்க்கையில் நல்ல நிலையினை அடைதல்

ஆடாய்க்கட்டித் தோலாய் உரித்தல்

மிகவும் கொடுமைக்குள்ளாக்குதல்

ஆடிக்கூழ்

தமிழ் ஆடிமாத பிறப்பன்று மாலையில் உளுத்தம் மா, பனங்கட்டி, பயறு, தேங்காய் சொட்டு முதலியன சேர்த்து தயாரிக்கும் இனிப்பான ஒரு கூழ்

ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால்

அடிக்கடியன்றி எப்போதாவது ஒரு முறை என்ற குறிப்பு

ஆடித்திரிதல்

ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்காமல் நடத்தல் என்ற குறிப்பு

ஆடியாடி

மெதுவாக

ஆடுகால்

துலாவினை நிறுத்தி வைப்பதற்கு ஏற்ற வகையில் நிலத்தில் நடப்பட்டுள்ள முள்முருக்கு, ஒதி முதலியமரங்கள் அல்லது சீமெந்து தூண்

ஆண்டுத்துவசம்

ஒருவர் இறந்த திதி ஒரு வருடத்திற்கு பின் வரும் போது பின்பற்றப்படும் பிதிர்க் கிரிகை

ஆண்டுமாறி

ஒன்று விட்டு ஒரு வருடம்

ஆண்பனைக் கள்ளு

ஆண் பனை மரத்திலிருந்து பெறப்படும் கள்ளு

ஆணிக்கட்டை

தச்சு வேளையில் இரண்டு பகுதிகளை பொருத்துவதற்கு ஆணி போல் பயன்படுத்தும் சீவிய சிறிய மரத்துண்டு