அ - வரிசை 225 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகவலன்

பாடும் பாணன்

அகவலைப்படுத்தல்

வலையில் அகப்படுதல்

அகவா

ஒலித்தலைச் செய்யா

அகவாட்டி

மனையாள்
இல்லக்கிழத்தி
அகத்தடியாள்

அகவாயில்

மனம்

அகவாய்

உள்ளிடம்
கதவுநிலை

அகவாளன்

வீட்டுக்காரன்
கணவன்
தலைவன்

அகவிதழ்

உள்ளிதல்
அல்லி

அகவிரல்

விரலின் உட்புறம்

அகவிருள்

மெய்யறிவின்மை

அகவிலை

உள்ளிதழ்
தானியவிலை

அகவுநர்

ஆடுவோர்
பாடுவோர்

அகவுவம்

பாடுவோம்

அகழான்

ஒருவகைப் பேரெலி
வயலெலி

அகழ்தல்

தோண்டுதல்
கல்லுதல்
உழுதல்

அகளங்கம்

குற்றமின்மை

அகளம்

களங்கமின்மை
யாழின் பத்தர்
தாழி
நீர்ச்சால்

அகற்சி

அகலம்

அகற்பன்

ஒப்பில்லாதவன்

அகற்ப விபூதி

இயற்கையில் உண்டான விபூதி