வ - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
விபாடம்

அம்பு

விபாவன்

சிநேகிதன்

விபீடணன்

விபீஷணன்

விபூடை

அலங்காரம்
அழகு
பிரபை

விபோதம்

புத்தி

விப்பிரர்

விப்பிரன்

விமுத்தி

பிரிவு
முத்தி

விமுத்திரம்

தளிர்
பூந்தளிர்

வண்டி

வளைந்த சக்கரங்களுடைய ஊர்தி

விசாலமான

இடமகன்ற

வரம்பு

எல்லை
அணை
அண்டை வெட்டல்

வட்டம்

மண்டலம். (தொல். சொல். 402, உரை.)
பரிவேடம். (சிலப். 10, 102, உரை.) (சினேந். 164.)
குயவன் திரிகை. (பிங்.)
வண்டிச்சக்கரம். (யாழ். அக.)
உண்கலமாய்த் தைக்கும் குலையின் நடுப்பாகம். Loc.
தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து (விநாயகபு. 74, 214).
சுற்று
ஒரு கிரகம் வான மண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழவட்டமாயிற்று.
சுற்றுப்பிரதேசம். கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949)
சில ஊர்களைக் கொண்ட பிரதேசம்
வட்டணை
தார்பொலி புரவிட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442)
விருந்து முதலியவற்றிற்குச் சமைத்த உபகரணத்திட்டம்
அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378)
வட்டப்பாறை
வடவர்தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51)
ஆலவட்டம். செங்கேழ் வட்டஞ் சுருக்கி (நெடுநல். 58.).1
வாகுவலயம். (பிங்.)1
தராசுத்தட்டு. வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781).1
கைம்மணி. (பிங்.)1
கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). (பிங்.)20.
முத்து வகை. முத்துவட்டமும் அனுவட்டமும் (S. S. I. I. ii, 22).2
பீடம். (யாழ். அக.)2
குளம். (பிங்.)2
கொள்கலம். (யாழ். அக.)2
நீர்ச்சால். (பிங்.)2
நீரெறிகருவி. பூநீர்பெய் வட்டமெறிய (பரிபா. 21, 42).2
வளைவு. வில்லை வட்டப் படவாங்கி (தேவா. 5, 9).2
பாராவளை. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15, 61). (பிங்.)2
ஆடை. வாலிழை வட்டமும் (பெருங். உஞ்சைக். 42, 208). (சூடா.)2
எல்லை. தொழுவல்வினை யொல்லை வட்டங்கடந் தோடுத லுண்மை (தேவா. 5, 9).30. Polish, refinement
திருத்தம். வட்டமாய்ப் பேசினான்
ஐந்நூறு சால்கொண்ட நீரளவு.3
மக்கட் பிரிவு
யானையின் நடுச்செவி. (பி்ங்.)3
தாழ்வு. (அக. நி.)3
களத்திற் சூடடிப்பதற்குப் பரப்பிய நெற்கதிர்
வட்டமரம்
தோறும். ஆட்டைவட்டம் காசு ஒன்றுக்கு . . . பலிசை (S. I . I. ii, 122, 27)

வளையல்

கையில் அணியும் அணிகலன்

வயிரக்குற்றம்

சரைமலம்
கீற்று
சப்படி
பிளத்தல்
துளை
கரி
விந்து
காகபாதம்
இருத்து
கோடியில்லன
கோடிமுரிந்தன
தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.)

வேறுபாடு

ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள்
வித்தியாசம், வேற்றுமை, பேதம், ஒப்பின்மை
விரோதம்

விகிருதி

வேறுபாடு
முன்புள்ளதிலிருந்து உண்டானது.
விகுதி (நன். 133, விருத்.)

வெறிக்கூத்து

வெறியாட்டு. (பு. வெ. 1 இருபாற். 10, தலைப்பு.)

வேள்விக்குண்டம்

ஓமகுண்டம். (பிங்.)

வழிமுறை

சந்ததி. வழிமுறை தீராவிடும்பைதரும் (குறள், 508).
கிரமம். அன்பு வழி முறையாற் சுருங்காது (திருக்கோ. 275, உரை)
பின்பு. வழிமுறைக் காயாமை வேண்டுவல்யான் (கலித். 82).

வாழி

'வாழ்க' என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.) தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6)
ஓர் அசைச்சொல். (சூடா.10, 16.)