ந - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நாடி

வாதம்
பித்தம்
சிலேட்டுமம்

நாடிகள்

அத்தி
அலம் புடை
இடை
காந்தாரி
குரு
சங்கினி
சிங்குவை
சுழுமுனை
பிங்கலை
புருடன்

நாற்பொன்

ஆடகம்
கிளிச்சிறை
சாதரூபம்
சாம்பூநதம்

நட்சத்திரங்கள்

அசுவினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருக சீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

நரகம்

அள்ளல்
ரெளரவம்
கும்பிபாகம்
கூடசாலம்
செந்துத் தானம்
பூதி
மாபூதி

நவமணிகள்

மாணிக்கம்
முத்து
வைரம்
கோமேதகம்
வைடூரியம்
மரகதம்
பவளம்
நீலம்
புஷ்பராகம்

நவ பாடாணம்

சாதிலிங்கம்
மனோசிலை
காந்தம்
அரிதாரம்
கந்தகம்
ரசகருப்பூரம்
வெள்ளைப் பாடாணம் (வெடியுப்பு)
தொட்டிப் பாஷாணம்
கெளரி பாஷாணம்.

நிதி

கச்சப நிதி
கற்ப நிதி
சங்க நிதி
பதும நிதி
நந்த நிதி
நீல நிதி
மகா நிதி
மகாபதும நிதி
முகுந்த நிதி

நூற்பயன்

அறம்
பொருள்
இன்பம்
வீடு

நை

வருந்து
நைதல்

நொ

நொண்டி
துன்பம்

நாழிகை

ஒரு நாளின் அறுபதில் ஒரு பகுதி நேரம். பண்டைத்தமிழர் இந்த நேர அளவீட்டையே கைக்கொண்டனர். இன்றைய 24 நிமிடங்களுக்குச் சமனானது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை என்பது கணக்கீடு.

நல்குரவு

வறுமை என்பதற்கான பழைய தமிழ்ச்சொல். இல்லாமை
ஏழ்மை என்பன ஒத்த கருத்துச் சொற்களாகும்

நரலுதல்

ஒலி எழுப்புதல்

நரல்வது

ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்)

நரலை

ஒலி; ஒலி எழுப்பும் கடல்

நரற்றுதல்

ஒலி எழுப்புதல்

நருமுதல்

பல்லால் கடித்தல்

நரன்

நரலும் குரங்கு அதாவது \'நரன்\' - மனிதன்

நரசிங்கன்

மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன்