ந - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நீர் மெத்தை

நீர் நிரப்பப்பட்ட மெத்தை

நிரீட்சமாணம்

நம்பிக்கை

நளவர்

அரச மெய்ப்பாதுகாப்பாளர்கள்
நழுவிகள்
சிறந்த தொழிலாளர்கள்
மரம் ஏறுதல்
கள் உற்பத்தி

நழுவி

ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுதல்

நழுவிகள்

நழுவி

நெரி

தகரு

நிர்வாணம்

ஆடையின்மை
ஆடை நீங்கிய நிலை

நிசி

இரவு
பொன்
இருள்
மஞ்சள்

நடுநிசி

நடுஇரவு
நடுச்சாமம்

நிலவியது

"அமைதி நிலவியது" நடந்தது என்ற கருத்தைக் கொண்டது

நிறவாதவப்பூ

நிறவாதவன்

நரந்தம்பழம்

தோடைப்பழம்

நாரு

பெருமரம்

நுணவு

நுணா

நீர் வஞ்சி

ஆத்து வஞ்சி

நாய்க்குமுளி

அத்தரசு

நாலசைச்சீர்

பொதுச்சீர்

நூலுறுப்பு

நூலின் அலகு/பிரிவு

நூற்றாண்டு விழா

100 ஆண்டுகள்

நெட்டிலிங்க மரம்

சில சமயங்களில் அசோக மரம் என அழைக்கப்படுகிறது. எனினும் சராக்கா இந்திகா (saraca indica) என்னும் மரமே பழைய நூல்களில் அசோகா என அழைக்கப்படுவதால், இம் மரம், போலி அசோகா என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இது சுமார் 15 மீட்டர் (50 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. நீண்டு மெலிந்த கூம்பு வடிவில் வளரும் இது, கிளைகளைப் பரப்பி வளர்வதில்லை. மெலிந்து, கிடை மட்டத்துக்குக் கீழ் சுமார் 45 பாகை அளவில் கீழ் நோக்கிய நிலையில் வளரும் இதன் கிளைகள் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரையே வளர்கின்றன. ஒடுங்கி நீளமாகவும், இருபுறமும் பளபளப்பாகவும் இருக்கும் இதன் இலைகள் தடிப்பானவை, விளிம்புகளில் அலையலையாக நெளிந்து காணப்படும். இலையின் வடிவமும், இவை தொங்கிய நிலையில் காணப்படுவதும், இம்மரத்தின் மூல இடம் அதிக மழைவீழ்ச்சி கொண்ட இடமாக இருக்கக்கூடும் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. [1]
நெட்டிலிங்க மரம், இந்தியாவின் தென்பகுதிகளையும் இலங்கையையும் தாயகமாகக் கொண்டது. பாரம் குறைந்த இந்த மரம் மேள வாத்தியங்கள் செய்வதற்கும் பயன்படுகின்றது.
இம்மரத்தின் பூக்களோ, பழங்களோ கவர்ச்சியானவை அல்ல. இலைகளின் அழகுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன. மதிலோரமாகவும், பாதைகளின் இருமருங்கும் வரிசையாக நட்டு வளர்ப்பதற்குப் பொருத்தமானது