த - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
திருமேனி

கோவில்களில் உள்ள கடவுள் சிலை.

திருவாய் மலர்தல்

ஞானிகள் உபதேசித்தல்.

திருஷ்டி பரிகாரம்

ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு.

தில்லு முல்லு

முறையற்ற வழி முறை.

திவால்

தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை.

தென்னை

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

தும்பை

வெண்மையான நிறத்தையுடைய ஒருவகை மலராகும்.

தாமரை

தாமரைப்பூ

திருநீற்றுப் பச்சிலை

கரந்தை

துளசி

துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.

தூதுவளை

சிங்கவல்லி
ரத்து நயத்தான்
தூதூவளை
தூதூளம்
தூதுளை

தாதி

வேலைக்காரி, பணிப்பெண், செவிலித்தாய், வேசை, பரணி, வாதி

தந்திரம்

உபாயம், உத்தி , யுக்தி
பித்தலாட்டம்
தொழில் திறமை
கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச் செய்கை
படை
யாழ் நரம்பு

தொடங்கு

ஆரம்பி

தூமை

பெண்டிர் மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரம்
தூ(ய்)மை = தூமை, தூய்மை குறுகினால், தூமை என்று கெடுகிறது
மாதவிடாய் ஒழுக்கு

தன்மை

பிரதிப்பெயர் சொற்கள்(pronoun) பயன்படுத்தும் போது, மூவிடங்களுள் தன்னை குறிக்கும் இடம்.
அதாவது தன்னை மையப்படுத்தும் இடம், தன்மை எனப்படும்.
குறித்த ஒரு பொருளின் தன்மை(quality)

தகுதி

தரம்

தவறான

தீமையான

தவறு

மற்றவருக்குச் செய்யும் தீமை அநீதி

திருப்பு

திசைமாற்று
திசை மாறு