ஏ - வரிசை 12 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகதேவன்

கடவுள்
புத்தன். (திவா.)

ஏகநாயகன்

ஏகநாதன். ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியாலுதவும் (பிரபோத. 28, 2).

ஏகப்பசலி

ஒருபோக நிலம்.

ஏகப்பிரளயம்

பெருவெள்ளம்

ஏகப்பிழை

முழுதும் வழு

ஏகபத்திரிகை

வெண்டுளசி
மலை

ஏகபத்தினிவிரதம்

ஏகதாரவிரதம்

ஏகபாதம்

நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.)
ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.)
இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)

ஏகபாதர்

ஒற்றைத்தாளர் ஆகிய சிவமூரித்தம்.

ஏகபாவனை

ஒருமையாகப் பாவிக்கை

ஏகபிங்கலன்

பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.)

ஏகபிராணன்

ஓருயிர்போன்ற நட்பு

ஏகபுத்திரன்

ஒரேமகன்
ஒருமகனுடையவன்

ஏகபோகம்

தனக்கே உரிய அனுபவம்
ஒருபோகம்
யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம்
ஆதிக்க உரிமை

ஏகம்

ஒன்று. (திவா.)
ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398).
தனிமை. (திவா.)
வீடு. (சூடா.)
மொத்தம். (W.)
அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127).
அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.)
மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது.

ஏகம்பட்சாரம்

உலோகவகை

ஏகம்பம்

காஞ்சியிலுள்ள சிவதலம். ஏகம்பத்துறையீசன் (தேவா. 1033, 6).

ஏகராசி

அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19).

ஏகலபுச்சன்

பைத்தியக்காரன்

ஏகவட்டம்

ஏகவடம்.இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5, 139).