அ - வரிசை 226 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகற்றம்

அகலம்
பிரிவு
பரப்பு

அகன்பணை

அகன்ற மருத நிலம்

அகனைந்திணை

குறிஞ்சி,முல்லை முதலிய ஐந்திணை

அகன்றிசைப்பு

யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம்

அகாடி

குதிரை முன்னங்காற்கயிறு
முள்

அகாமவினை

அபுத்திபூர்வமான செயல்

அகிதலம்

பாதாளம்

அகிற்கூட்டு

ஏலம், கருப்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு

அகுசலவேதனை

துக்க உணர்ச்சி

அகுதார்

உரிமையாளி

அகுதை

ஓர் ஈகையாளன்

அகுரு

வெட்டிவேர்
அகில்மரம்
இலகுவானது
ஈனமில்லாதது
குரு வல்லாதவன்

அகுவீனன்

தாழ்ந்த குலத்தில் தோன்றியவன்

அகுளுதி

வேப்பமரம்

அகைதல்

கிளைத்து எரிதல்
வருந்தல்
தாமதித்தல்
தாழ்தல்
ஒடித்தல்
முறித்தல்
தளிர்த்தல்
தளைத்தல்

அகைப்பு

எழுச்சி
மதிப்பு
இடை விட்டுச் செல்லுகை
அறுத்தல்
முறித்தல்
அகைப்புவண்ணம் - இருபது வண்ணங்களில் ஒன்று
அஃது அறுத்தறுத்தொழுகும் நடையை உடையது

அகோரத்திரம்

பகலும் இரவும்

அக்கசாலையர்

கம்மியர்
தட்டார்

அக்கச்சி

தமக்கை

அக்கப்பறை

அலைகை