அ - வரிசை 224 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அகமகிழ்ச்சி

உளக்களிப்பு

அகமணை

அகமணைத் தட்டு
வண்டியினுட் பலகை
படகின் உட் கட்டை

அகமதி

ஆணவம்

அகமருடணம்

வேதமந்திர விசேடம்
நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்

அகமாட்சி

இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள்

அகமிசைக்கிவர்தல்

புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்

அகமுணல்

தெளிதல்
மனதிற் கொள்ளல்

அகம்படி

அகத்தொண்டு
உள்ளிடம்
மனம்
ஒரு குலம்
அடிவயிறு

அகம்பு

உள்

அகருதம்

வீற்றிருக்கை

அகர்க்கணனம்

கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை

அகர்ணம்

செவிடு
பாம்பு

அகலக்கவி

வித்தாரக்கவி
வித்தாரக்கவியைப் பாடும் புலவன்

அகலம்புகுதல்

மார்பிடத்தே முயங்கல்

அகலர்

தீண்டாதவர்
கடவுள்

அகலாங்கண்

அகன்ற ஊரிடம்

அகலறை

பாசறை
மலைப்பக்கம்

அகலன்

ஏழை
கடவுள்
கொடியவனல்லாதவன்
பெருத்தவன்
பெருமையுடையவன்

அகவயிரம்

அகக்காழ்

அகவர்

மங்கலபாடகர்
புகழ்வோர்
நாட்டில் வாழ்வோர்
வீட்டிலிருப்பவர்கள்