அ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அவனிகை

திரை
இடுதிரை

அவாச்சியன்

குறிப்பிடத்தகாதவன்

அந்தணர்

வேதியர்

அடையான்

ஏற்காதவன்

அமர்புடையார்

விருப்பமுடையார்
சேர்ந்துவாழ்பவர்

அகறல்

அகன்றுபோதல்
நீங்கிப்போதல்

அருந்தகம்

மென்பானவகை அருந்திச் செல்லக் கூடிய இடம்

அளகு

பெண் மயில்

அல்லங்காடி

அல்(இரவு) + அங்காடி

அடுக்கு நந்தியாவட்டை

இதுவும் நந்தியாவட்டைபோன்றதுதான் ஆனால் இரண்டு
முன்று அடுக்குகள் காணப்படும்.

அறுபத்து நான்கு கலைகள்

எழுத்திலக்கணம்
எழுத்தாற்றல்
கணிதவியல்
மறை நூல்
தொன்மம்
இலக்கணவியல்
நய நூல்
கணியக் கலை
அறத்துப் பால்
ஓகக் கலை
மந்திரக் கலை
நிமித்தகக் கலை
கம்மியக் கலை
மருத்துவக் கலை
உறுப்பமைவு
மறவனப்பு
வனப்பு
அணி இயல்
இனிதுமொழிதல்
நாடகக் கலை
ஆடற் கலை
ஒலிநுட்ப அறிவு
யாழ் இயல்
குழலிசை
மத்தள நூல்
தாள இயல்
வில்லாற்றல்
பொன் நோட்டம்
தேர்ப் பயிற்சி
யானையேற்றம்
குதிரையேற்றம்
மணி நோட்டம்
மண்ணியல்
போர்ப் பயிற்சி
கைகலப்பு
கவர்ச்சியியல்
ஓட்டுகை
நட்பு பிரிக்கை
மயக்குக் கலை
புணருங் கலை
வசியக் கலை
இதளியக் கலை
இன்னிசைப் பயிற்சி
பிறவுயிர்மொழி
மகிழுறுத்தம்
நாடிப் பயிற்சி
கலுழம்
இழப்பறிகை
மறைத்ததையறிதல்
வான்புகுதல்
வான் செல்கை
கூடுவிட்டு கூடுபாய்தல்
தன்னுறு கரத்தல்
மாயம்
பெருமாயம்
நீர்க் கட்டு
அழற் கட்டு
வளிக் கட்டு
கண் கட்டு
நாவுக் கட்டு
விந்துக் கட்டு
புதையற் கட்டு
வாட் கட்டு
சூனியம்

அறைகலன்

அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை
நாற்காலி
மேசை
கட்டில்
மெத்தை முதலிய சாமான்கள்

அரிவாண்மணை

விட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கூரிய வாளுடன் இருக்கும் அமரக்கூடிய பிடி.

அவம்

கேடு
தீமை