வ - வரிசை 14 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வரவு வைக்காதே

பொருட் படுத்தாதே.

வராண்டா

நடைவழி : முற்றம்.

வரிந்து கட்டிக் கொண்டு

தீவிரமாக.

வரும்படி

வருமானம்.

வர்த்த மானம்

வரலாறு : முழுவிவரம்.

வலுக்கட்டாயமாக

வற்புறுத்துதல் தன்மை.

வலக்கரம்

பக்க பலம்.

வழிக்குக் கொண்டு வா

நன்னெறியில் நிற்கச் செய்.

வளவள என்று

மிகுதியாக.

வளைத்துப் போடு

தன் வயப்படுத்து.

வள்ளு வள்ளென்று

எரிச்சல் காட்டும் குறிப்பு.

வஜா

வரி நீக்கம்.

வஸ்தாது

திறமை மிக்கவன்.

வஸ்திர காயம்

பொடியாக்குதல்.

விக்னேசுவரர்

பிள்ளையார்

வைவஸ்வதி

தென்திசை

வைவாகிகம்

(விவாகம்)விவாகத்திற்குரியது.

வ்ருஜநம்

தலை மயிர்

வைநாசிகம்

ஓர் யோகம்.

வைரூப்பியம்

அவலட்சணம்